உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு தமிழ் இருக்கைகளில் தமிழ் பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்- வைகோ

Published On 2022-07-28 15:15 IST   |   Update On 2022-07-28 15:15:00 IST
  • கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது.
  • கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் 48 ஆண்டுகளாக தமிழ் இருக்கை இடம் பெற்றுள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008-ம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.

தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வமும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News