வாடிப்பட்டி அருகே வாலிபர் சரமாரி அடித்துக்கொலை
- பெருமாள்பட்டி மந்தையில் உறவினர் ஆனந்தகுமார் என்பவரும், அதே ஊரை சேர்ந்த ஜீவாவும் சண்டை போட்டனர்.
- ஜீவா மறுத்ததோடு, மணிகண்டனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் மணி கண்டன் (வயது26). இவர் பள்ளப் பட்டியில் உள்ள பெல்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பெருமாள்பட்டி மந்தையில் உறவினர் ஆனந்தகுமார் என்பவரும், அதே ஊரை சேர்ந்த ஜீவாவும் சண்டை போட்டனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் சண்டையை விலக்கிவிட்டு சமரசமாக செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு ஜீவா மறுத்ததோடு, மணிகண்டனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மறுநாள் மணிகண்டன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா, அவரது பெற்றோர் ராமமூர்த்தி-லலிதா, மனைவி சரண்யா, சகோதரர்கள் ராஜசேகர், சிவா, முத்து மனைவி சூரியகலா, உறவினர் சரத் ஆகிய 8 பேர் முன்விரோதத்தில் மணிகண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கும்பல் அங்கிருந்த கட்டை, கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் படுகாய மடைமந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மணிகண்டன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இதில் தொடர்புடைய ஜீவா உள்பட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.