உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2022-06-08 16:22 IST   |   Update On 2022-06-08 16:22:00 IST
  • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் மயங்கி விழுந்தார்.
  • அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 60)இவரும் அந்தப் பகுதியை சேர்ந்த மேலும் சில நபர்களும் அந்த ஊரில் நடைபெற உள்ள சாகை வார்த்தல் திருவிழாவிற்காக மாரியம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு க்கொண்டிருந்தனர்.

அண்ணாமலை கோவிலின் மேல்புறத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒயரை எடுத்துப் போட முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையை மீட்டு அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற உளுந்தூ ர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News