ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38).
- அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ் என்கிற பார்கவி (வயது38). திருநங்கை. இவர் அதே பகுதியில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகே திருநங்கை பார்கவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரது உடலில் அரிவாளால் வெட்டியதற்கான பலத்த காயங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்கவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் பார்கவியை வெட்டி கொல்ல முயன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருநங்கை பார்கவியின் காதலன் அவரது வீட்டின் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.