வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறையில் பங்கேற்ற விஜய் வசந்த்
- நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி.
- கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறையில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டிற்கு வருகை தந்து தலைமை தாங்கி சிறப்பித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களுக்கும், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அவர்களுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன், திரு. தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், பிற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.
மழை என்று பாராமல் பெருந்திரளாக வந்து சேர்ந்த பூத் கமிட்டி முகவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார, மண்டல தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி. கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.