உள்ளூர் செய்திகள்

இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது- தமிழக சுகாதாரத்துறை தகவல்

Published On 2023-03-16 09:34 IST   |   Update On 2023-03-16 09:34:00 IST
  • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News