உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்- 8 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2022-08-08 11:51 GMT
கடம்பத்தூர் ஒன்றியம் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். நேற்று முன்தினம் தேவேந்திரன் தன் வீட்டிற்கு தண்ணீர் எடுத்துச் சென்ற போது, குழாயை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன் தரப்பினர் மிதித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட தேவேந்திரனின் மனைவி கலைவாணி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரையும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர். இந்த கோஷ்டி மோதல் குறித்து இரு தரப்பினரும் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன், சந்திரன், கலைவாணி தேவேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News