உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே பட்டாக்கத்தியால் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது
- நடுரோட்டில் கேக்கை வைத்து விஷ்ணு பட்டாகத்தியால் வெட்டினார். நண்பர்கள் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருந்தனர்.
- வேலஞ்சேரியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு(24).இவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் அதே பகுதியில் கொண்டாடினார்.
அப்போது நடுரோட்டில் கேக்கை வைத்து விஷ்ணு பட்டாகத்தியால் வெட்டினார். நண்பர்கள் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் விஷ்ணு பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை அவரது நண்பர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுபற்றி திருத்தணி போலீசுக்கும் தகவல் கிடைத்தது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வேலஞ்சேரியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.