உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-01-21 17:45 IST   |   Update On 2023-01-21 17:45:00 IST
  • பிரியா தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
  • மனமுடைந்த பிரியா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு:

திருக்கழுக்குன்றம் கருங்குழி ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 26). சென்னையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பிரியாவுடைய தாய் மாமனை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர் கூறிவந்ததாக கூறப்படுகிறது. பிரியா தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் குடும்பத்தினர் பிரியாவிடம் தாய்மாமனை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவந்தனர். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News