உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே லாரியின் கீழ் தூங்கிய கிளீனர் உடல் நசுங்கி பலி

Published On 2023-04-24 12:33 IST   |   Update On 2023-04-24 12:33:00 IST
  • ரோகித் யாதவ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • போலீசார் விரைந்து வந்து ரோகித் யாதவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர்:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி டிரைவர். இவர் கிளீனரான அதே பகுதியை சேர்ந்த ரோகித யாதவ் என்பவருடன் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு லாரியை ஓட்டி வந்தார்.

தொழிற்சாலைக்கு உள்ளே லாரியை நிறுத்த அனுமதி வழங்காததால் தொழிற்சாலை அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்தனர். அப்போது கிளீனர் ரோகித் யாதவ் லாரியின் கீழ் படுத்து தூங்கினார்.

நேற்று இரவு 8 மணிக்கு தொழிற்சாலை உள்ளே செல்ல லாரிக்கு அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து டிரைவர் ராஜ்குமார் லாரியின் கீர் கிளீனர் ரோகித்யாதவ் தூங்கு வதை கவனிக்காமல் லாரியை இயக்கினார். இதில் ரோகித் யாதவ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து ரோகித் யாதவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News