உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் திருமண மண்டபங்களில் மணப்பெண்களின் நகை திருட்டு

Published On 2022-09-10 13:17 IST   |   Update On 2022-09-10 13:17:00 IST
  • திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
  • மணமகனின் தந்தை பாலசுப்பரமணியன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது59). இவரது மகனின் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்தனர். மணமகன் தனி அறையிலும், மணமகள் தனி அறையிலும் தங்க வைக்கப்பட்டனர். மணமகள் தான் தங்கி இருந்த அறையில் தனது 6 பவுன் தங்க டாலர் செயினை கழற்றி வைத்திருந்தார். மணமகள் அந்த அறையில் இல்லாத நேரத்தில் உறவுக்கார பெண் என்று கூறி பெண் ஒருவர் அந்த அறைக்கு சென்றார். அவர் மணமகள் கழற்றி வைத்தி ருந்த 6 பவுன் செயினை திருடிச் சென்று விட்டார். இதற்கிடையே மணமகள் நகையை சரி பார்த்த போது 6 பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மணமகனின் தந்தை பாலசுப்பரமணியன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (56). விவசாயி. நேற்று திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது.

அப்போது ஒரு பெண் மணமகள் அறையில் புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.

Similar News