உள்ளூர் செய்திகள்
திருவாலங்காடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி கொல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுகேஸ்வரன்.
- கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி கொல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுகேஸ்வரன் (வயது 44). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மாலை அவரது வயல்வெளியில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.