உள்ளூர் செய்திகள்
திருவாலங்காடு அருகே வந்தபோது மின்சார ரெயில் என்ஜீனில் திடீர் புகை- நடுவழியில் ரெயில் நிறுத்தம்
- அரக்கோணத்தில் இருந்து இன்று மதியம் பயணிகள் மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
- அரக்கோணத்தில் இருந்து வந்த மற்ற மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது.
திருவள்ளூர்:
அரக்கோணத்தில் இருந்து இன்று மதியம் பயணிகள் மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. காலை 11 மணியளவில் திருவாலங்காடு அருகே வந்த போது மின்சார ரெயிலின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டு புகை வந்தது. இதையடுத்து மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகள் மின்சார ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் கடும்அவதி அடைந்தனர். அரக்கோணத்தில் இருந்து வந்த மற்ற மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பின்னர் மின்சார ரெயில் என்ஜீன் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் இயங்கியது.