உள்ளூர் செய்திகள்

புதிதாக அலங்கரிக்கப்பட்ட சாலையோர கடைகள்


செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரம் நகரம் முழுவதும் புதுப்பொழிவு

Published On 2022-07-10 17:45 IST   |   Update On 2022-07-10 17:45:00 IST
  • மாமல்லபுரம் நகரம் முழுவதும் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி "செஸ் ஒலிம்பியாட்" துவங்குவதால் மாமல்லபுரம் நகரம் முழுவதும் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

மரங்களின் வர்ணம் பூசுவது, மார்கட் வீதிகளில் செஸ் தம்பி லோகோ வரைதல், உணவு பாதுகாப்பு துறை சார்பில் தள்ளு வண்டி கடைகளை புதுக்கடை போன்று மாற்றும் அலங்கார வேலைகள் செய்வது போன்ற அலங்கார வேலைகளை செய்து வருகின்றனர்., இதனால் மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொழிவு அடைந்து வருகிறது.

Tags:    

Similar News