உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2022-08-15 10:07 GMT
கஞ்சா விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மர்ம நபர்கள் கஞ்சா விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனாஸ் ரூட் (வயது 33), பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருவதும், 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கஞ்சா விற்று வருவதும் தெரியவந்தது.

அதே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் 50 பேர் பெண் வாடிக்கையாளர்கள் என்றும் கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News