உள்ளூர் செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

Published On 2023-03-27 10:31 GMT   |   Update On 2023-03-27 11:33 GMT
  • எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு தரப்பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
  • இந்திய அரசு, நமது மீனவர்களின் கவலைகளை நன்கு உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பாடுபடுகிறது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.சண்முகம் ஆகியோர் எழுத்து மூலம் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் அளித்துள்ள பதில் வருமாறு:-

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய செய்திகள் கிடைக்கும் போதெல்லாம், இந்திய அரசு இராஜதந்திர வழியில் இலங்கை அரசிடம் எடுத்துரைக்கிறது.

மீனவர்கள் பிரச்சினையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது, மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு தரப்பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்திய அரசு, நமது மீனவர்களின் கவலைகளை நன்கு உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பாடுபடுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News