உள்ளூர் செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தொழிலாளி தற்கொலை
- வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் ஓரம் உள்ள ஒரு மரத்தில் கோபால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் ஓரம் உள்ள ஒரு மரத்தில் கோபால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.