உள்ளூர் செய்திகள்
செங்குன்றம் அருகே அரிசி ஆலையில் பாய்லர் சரிந்து தொழிலாளி பலி
- விபத்தில் படைலால் பலத்த காயம் அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் படைலால் (வயது 38). இவர் செங்குன்றத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே பொன்னேரி அடுத்த காட்டாவூரில் உள்ள அரிசி ஆலையில் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக படைலால் வந்தார்.
அவர் பணியில் ஈடுபட்ட போது திடீரென பாய்லர் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் படைலால் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி படைலால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.