உள்ளூர் செய்திகள்

பஸ்சில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ரகளை- பஸ்சை நடுவழியில் நிறுத்தி டிரைவர், கண்டக்டர் போராட்டம்

Published On 2022-10-14 14:11 IST   |   Update On 2022-10-14 14:11:00 IST
  • அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.
  • பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் இருந்து மாகரல் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.

இதனை பஸ் டிரைவரும், கண்டக்டரும் கண்டித்தனர். ஆனால் மாணவர்கள் பஸ்சுக்குள் வர மறுத்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.

பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் (558பி) சென்றது. பொன்னேரி பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அவர்கள் மூடப்பட்ட படிக்கட்டு கதவை திறக்குமாறு கூறி டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அரசு பஸ்சை பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிசென்று டிரைவர் நிறுத்தினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் மற்றும் வாசுகி ஆகியோர் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறி எச்சரித்தனர்.

மீண்டும் இது போல் செய்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News