உள்ளூர் செய்திகள்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று நடையை மூடக்கூடாது- சரத்குமார்

Published On 2023-08-10 09:45 GMT   |   Update On 2023-08-10 09:46 GMT
  • வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
  • தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கிய நிலையில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருக்கக் கூடிய சமயத்தில் நடை மூடப்படும் என்ற அறிவிப்பும், பக்தர்கள் தனியார் வாகனங்களில் வரக்கூடாது, அரசுப்பேருந்தில் வர வேண்டும் என பல வகையான வழிபாட்டு கட்டுப்பாடுகள் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கையில் குழப்பம் ஏற்படுவதாக அமைந்துள்ளது. இத்தகைய சூழல் முற்றிலும் நியாயமற்றது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News