உள்ளூர் செய்திகள்

பட்டாசு கடையில் வசூல் வேட்டை- சேலம் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2022-10-27 09:49 IST   |   Update On 2022-10-27 09:49:00 IST
  • கண்ணையன் அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடைகளில் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது.
  • புகார் குறித்து விசாரிக்கும்படி சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் சரவணகுமரனிடம் உத்தரவிட்டார்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கண்ணையன் (வயது 45). இவர் அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடைகளில் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது. இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வீடியோ, புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரவவிட்டதோடு அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.

இதுகுறித்து விசாரிக்கும்படி சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் சரவணகுமரனிடம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் விசாரித்து அளித்த அறிக்கையின்படி ஏட்டு கண்ணையனை அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News