உள்ளூர் செய்திகள்
உண்டியல் எண்ணும் பணியை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ. 2.28 கோடி வருவாய்

Published On 2023-02-10 10:31 IST   |   Update On 2023-02-10 10:31:00 IST
  • காவடி பிறை மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், கோவில் இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
  • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது.

காவடி பிறை மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 2 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 858-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.26,025, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.12,782, தங்கம் 1 கிலோ 690 கிராம், வெள்ளி 27கிலோ 500 கிராம், பித்தளை 99 கிலோ, செம்பு 15 கிலோ, தகரம் 3 கிலோ மற்றும் அயல் நோட்டு 405-ம் இருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, திருவைகுண்டம் ஆய்வாளர் நம்பி, பொதுமக்கள் பிரதிநிதி வேலாண்டி ஓதுவார், கருப்பன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News