உள்ளூர் செய்திகள்

வியாசர்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது

Published On 2023-08-07 09:01 GMT   |   Update On 2023-08-07 09:01 GMT
  • எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு ரவுடி ஒருவன் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் அந்த ரவுடி யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன ரவுடி அரவிந்தன் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு அரவிந்தன் கத்தியை காட்டி மிரட்டி டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்

அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார் அரவிந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது ரவுடிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News