உள்ளூர் செய்திகள்
ஆர்.கே .பேட்டை அருகே பணம் வைத்து தாயம் விளையாடிய 4 பேர் கைது
- பணம் வைத்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மேல் மோசூர் கண்டிகை கிராமத்தில் சிலர் பணம் வைத்து தாயம் விளையாட்டு விளையாடுவதாக ஆர்.கே .பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி(45), கணேசன்(45), விஸ்வநாதன்(56), மற்றும் ஆர்.பி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.