உள்ளூர் செய்திகள்

நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-01-08 15:43 IST   |   Update On 2024-01-08 15:52:00 IST
  • மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
  • இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமமான தச்சமலை பகுதியில் உள்ள குற்றியார், தச்சமலை, தோட்டமலை உட்பட பல மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தச்சமலையில் நியாய விலை கடை கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருவட்டார் மேற்கு வட்டாரத் தலைவர் வினுட்ராய், பேச்சிப்பாறை ஊராட்சி கமிட்டி தலைவர் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News