உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- தலையில் பலத்த காயம் அடைந்த காட்டன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பகுதி சேர்ந்தவர் காட்டன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பொன்னேரியில் இருந்து ஏலியம் பேட்டிற்கு சென்றார்.
அப்போது திடீர் பிரேக் போட்டதால் பின்னால் அமர்ந்து இருந்த காட்டன் நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காட்டன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.