உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பாலியல் தொல்லை- விளையாட்டு பயிற்சியாளருக்கு வலைவீச்சு

Published On 2023-01-21 13:15 IST   |   Update On 2023-01-21 13:15:00 IST
  • புதுவை கிராமப் பகுதியில் இருந்து பயிற்சிக்கு வந்த மாணவிக்கு சண்முகம் செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
  • சம்பந்தப்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாகூர்:

பாகூர் பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சேர்ந்து கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அதில் புதுவை கிராமப் பகுதியில் இருந்து பயிற்சிக்கு வந்த மாணவிக்கு சண்முகம் செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கைப்பந்து பயிற்சியாளர் சண்முகத்தைவலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News