உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டையில் திருமணமான பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்- வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-04-05 10:00 GMT   |   Update On 2023-04-05 10:00 GMT
  • சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும்.
  • இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி லட்சுமியாபுரத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கல்லூரியில் பி.எட்., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது அவருக்கும், அதே பகுதியில் மரக்கடை நடத்தி வரும் சுரேந்தர் (வயது27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேந்தர், கம்ப்யூட்டர் தொடர்பான சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை தனது கடைக்கு அழைத்துள்ளார்.

அதனை நம்பி கடைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்து மயக்கமடைந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு இளம்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதுபற்றி இளம்பெண் தனது தாயிடம் தெரிவித்ததால் அவர் தாய்மாமனுக்கு மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும். இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது சுரேந்தர் அந்த பெண்ணிடம் ரூ. 20 பத்திரத்தில் சில உறுதி மொழிகளை எழுதி வாங்கியுள்ளார். மேலும் இளம்பெண்ணை தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு அழைத்துச்சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மாயமான இளம்பெண்ணின் தாய் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட இளம்பெண், சுரேந்தர் பிடியில் இருந்து தப்பி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.

இந்த நிலையில் சுரேந்தர் மாயமாகி விட்டதாக அவரது தந்தை எம்.ரெட்டியாபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News