உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் நர்சுக்கு தொந்தரவு- திருச்சி பஸ் டிரைவர் உள்பட 2 பேரிடம் விசாரணை

Published On 2023-03-24 09:35 IST   |   Update On 2023-03-24 09:35:00 IST
  • இளம்பெண் சேலம் புதிய பஸ் நிலையம் இறங்கியதும் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
  • சசிக்குமார் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

சேலம்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது பெண் நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அந்த பெண்ணின் இருக்கைக்கு பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 2 பேர் ஆபாசமாக பேசியபடி வந்துள்ளனர்.

இதுகுறித்து பஸ் டிரைவரிடம் தெரிவித்த போது, அவர் கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது. பின்னர் அந்த இளம்பெண், சேலம் புதிய பஸ் நிலையம் இறங்கியதும் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், திருச்சி மாவட்டம் முசிறி பாப்பம்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (37) மற்றும் அவரது நண்பர், நர்சிடம் ஆபாசமாக பேசி வந்ததும், சசிக்குமார் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News