உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மதுபாரில் தகராறு- பா.ஜனதா பிரமுகர் மீது வழக்கு

Published On 2022-12-08 14:57 IST   |   Update On 2022-12-08 14:57:00 IST
  • திருவள்ளூர் நகர பா.ஜ.க. இளைஞரணி தலைவர் உதயா கார்த்திகேயனிடம் பார் ஊழியர் பிரசாத் பணம் கேட்டார்.
  • மது பாரில் நடந்த தாக்குதல் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் மதுக்கடை பார் உள்ளது. இங்கு சிக்கன் மற்றும் பொருட்கள் வாங்கியது தொடர்பாக திருவள்ளூர் நகர பா.ஜ.க. இளைஞரணி தலைவர் உதயா கார்த்திகேயனிடம் பார் ஊழியர் பிரசாத் பணம் கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் பிரசாத் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உதயா கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் பரந்தாமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மது பாரில் நடந்த தாக்குதல் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News