உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: நெல்லை மாவட்டத்தில் 96.61 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

Published On 2023-05-08 10:57 GMT   |   Update On 2023-05-08 10:57 GMT
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8,513 பேரும், மாணவிகள் 10,498 பேரும் என மொத்தம் 19,011 பேர் தேர்வு எழுதினர்.
  • 8,196 மாணவர்களும், 10,313 மாணவிகளும் என மொத்தம் 18,509 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தமாக 97.36 சதவீதம் ஆகும்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக நெல்லை மாவட்டத்தில் 73 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மாணவர்கள் 9,017 பேரும், மாணவிகள் 10,705 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 8,576 பேர் தேர்ச்சி பெற்றனர். அதே போல் 10,477 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருந்தனர். மொத்தமாக 96.61 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8,513 பேரும், மாணவிகள் 10,498 பேரும் என மொத்தம் 19,011 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,196 மாணவர்களும், 10,313 மாணவிகளும் என மொத்தம் 18,509 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தமாக 97.36 சதவீதம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 63 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7,643 மாணவர்களும், 9,103 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 7,194 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 94.13 சதவீதம் ஆகும். இதேபோல் மாணவிகள் 8,875 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.50 சதவீதம் ஆகும்.

மொத்தமாக மாவட்டத்தில் 16,746 பேர் தேர்வு எழுதிய நிலையில் 16,069 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.96 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

மொத்தமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News