உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.
- சவரணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 6 மாதமாக தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் கீதா திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து சவரணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.