உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்- 261 மனுக்கள் மீது நடவடிக்கை

Published On 2022-07-12 16:46 IST   |   Update On 2022-07-12 16:46:00 IST
சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 பேருக்கும், பென்னலூர் கிராமத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பரந்தூர் மண்டல சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 பேருக்கும், பென்னலூர் கிராமத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

Similar News