உள்ளூர் செய்திகள்
பல்லாவரம் அருகே பால் விற்பனை கடையில் ரூ.5 லட்சம் கொள்ளை
- பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.
- சசிகுமார், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அதே பகுதி, பெரியநகர் மெயின் ரோட்டில் பால் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிசென்றார். இன்று அதிகாலை கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்ட வேண்டிய ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. மேலும் சசிகுமார் கடையில் வைத்திருந்த ஒன்றரை சவரன் நகையையும் கொள்ளையர்கள் திருடி சென்று இருந்தனர்.
இது குறித்து சசிகுமார், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.