உள்ளூர் செய்திகள்
பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.