உள்ளூர் செய்திகள்

சாலையில் நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன் பலி- மனைவி படுகாயம்

Published On 2023-07-08 12:46 IST   |   Update On 2023-07-08 12:46:00 IST
  • கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது.
  • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.

திருத்தணி:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நீலகண்டாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் சிவா(34). இவரது மனைவி மகேஸ்வரி. (25) இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் நெசவு தொழிலான தறி ஓட்டும் பணி செய்து வருகின்றனர்.

இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் இருந்து வேலை முடிந்து நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.

அவரது மனைவி மகேஸ்வரி பலத்த காயமடைந்த நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு சிவாவின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News