மீஞ்சூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள இவரது இளைய மகள் வீட்டிற்கு சென்றார்.
- வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள இவரது இளைய மகள் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகை, மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர். கட்டிலுக்கு அடியில் 36 பவுன் நகையை பார்த்த சாரதி மறைத்து வைத்து இருந்தார். அதனை கொள்ளையர்கள் பார்க்காததால் அந்த நகை தப்பியது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.