உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-04-04 11:49 IST   |   Update On 2023-04-04 11:49:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அரிவாளால் லோகேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • பலத்த காயமடைந்த லோகேசுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகேஷ் (வயது 25) இவர் மீது திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இவர் நேற்று மாலை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மதுபான கடை முன்பு நின்றபடி உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அரிவாளால் லோகேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த லோகேசுக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News