உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.54 அடியாக உயர்ந்தது
- நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- நேற்று 102.25 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 102.54 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 6,595 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 6,295 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 102.25 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 102.54 அடியாக உயர்ந்தது.