உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,373 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கனஅடியாக சரிந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1,200 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,373 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 103.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.45 அடியாக குறைந்துள்ளது.