உள்ளூர் செய்திகள்

மண்ணிவாக்கத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

Update: 2022-09-26 12:19 GMT
  • வாலிபர் ஒருவர் பாரதி அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை எல்.ஐ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 24), இவரது மகன் மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு சாலையோரமாக பாரதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பாரதி அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பாரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News