உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் அருகே 50 புறாக்களை திருடியவர் கைது
- மீஞ்சூரை அடுத்த இலவம் பேடு பகுதியைச் சேர்ந்தவர் துரை.
- துரையின் வீட்டில் இருந்த 50 பேன்சி புறாக்கள் திருடு போனது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த இலவம் பேடு பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவர் வீட்டில் ஏராளமான பேன்சி புறாக்கள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துரையின் வீட்டில் இருந்த 50 பேன்சி புறாக்கள் திருடு போனது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முரிச்சம்பேடு மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனை கைது செய்தனர். சம்பவத்தன்று புறாக்களை பிடித்து விற்பனை செய்வதற்காக சாக்குப்பையில் எடுத்து சென்றபோது அனைத்தும் மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.