உள்ளூர் செய்திகள்
திருமழிசை அருகே குளத்தில் ஆண் பிணம்
- திருமழிசை அடுத்த பிரயாம்பத்து பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருமழிசை அடுத்த பிரயாம்பத்து பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதிைய சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.