உள்ளூர் செய்திகள்
பராமரிப்பு பணி நடப்பதால் பெருங்குடி மயான பூமி மே 14-ந்தேதி வரை மூடல்
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந்தேதி) முதல் 14.05.2023 வரை 45 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது.
- பொதுமக்கள் அருகிலுள்ள அடையாறு மண்டலம், பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருங்குடி மயானபூமியின் எரிவாயு தகனமேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மாற்றம் செய்யவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந்தேதி) முதல் 14.05.2023 வரை 45 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள அடையாறு மண்டலம், பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.