உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றி திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2023-08-20 17:30 IST   |   Update On 2023-08-20 17:30:00 IST
  • மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
  • மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை, ஒத்தவாடை தெரு, ஐந்து ரதம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கங்கை கொண்டான் மண்டபம் சாலை, மாதா கோவில் தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு, ராஜீவ்காந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றி திரிவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதேபோல் சுற்றுலா வாகனங்கள் செல்லாதவாறு மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்ன சாலைகளில் சாலையிலேயே மாடுகள் படுத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் மேற்பார்வையில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை பொது வெளியில் திரிய விட்டதாக மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News