உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர் கைது

Published On 2023-11-07 12:50 IST   |   Update On 2023-11-07 12:50:00 IST
  • ஆலத்தூரில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • தேவநாதன் என்பவரை போலீசார் கைது செய்து காருடன் மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர்.

மாமல்லபுரம்:

பாண்டிச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுபாட்டில் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சூனாம்பேடு அடுத்த ஆலத்தூரில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெட்டி, பெட்டியாக 2352 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்திவந்திருப்பது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இதையடுத்து மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட பாண்டிச்சேரி கரிக்காலம்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவநாதன் என்பவரை போலீசார் கைது செய்து காருடன் மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர்.

Tags:    

Similar News