உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கடலோர பகுதியில் பிளாஸ்டிக் கவர்குவியல்கள்- வீட்டுக்கு வீடு துணிப்பை விழிப்புணர்வு

Published On 2023-09-22 05:17 GMT   |   Update On 2023-09-22 05:17 GMT
  • கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது
  • பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடலோர மீனவர் பகுதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்ததால், அப்பகுதி கடற்கரை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உத்தரவின் பெயரில் அங்குள்ள கடைகளை அலுவலர்கள் சோதணையிட்டு எச்சரித்தனர்.

மேலும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வீட்டுக்கு வீடு துணிப்பைகளை வழங்கியது. பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News