உள்ளூர் செய்திகள்

வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது

Update: 2022-09-26 11:24 GMT
  • மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் மதுராந்தகம் சாலை புதுப்பட்டு பகுதியில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுராந்தகம்-வேடந்தாங்கல் சாலையில் இருந்து மதுராந்தம் நோக்கி வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1,440 வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல்செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்த புதுச்சேரியை சேர்ந்த பாலமுருகன் (வயது 23) மற்றும் மதிவாணன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News