உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே மின்தடை ஏற்படுத்தி 7 மின் கம்பங்களில் இருந்த கம்பியை வெட்டி நூதனமாக திருடி சென்ற கும்பல்

Published On 2022-07-15 12:57 IST   |   Update On 2022-07-15 12:57:00 IST
  • மின்கம்பி திருட்டு குறித்து வயலூர் கிராம விவசாயிகள் அச்சரப்பாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
  • மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகள் மீண்டும் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம் அருகே நெற்குணம் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன.

இதில் 7 மின் கம்பங்களில் உள்ள சுமார் 4000 மீட்டர் நீளமுள்ள அலுமினிய மின் கம்பிகளை வெட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். மின்தடை ஏற்படுத்தி மர்ம கும்பல் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த மின்கம்பி திருட்டு குறித்து வயலூர் கிராம விவசாயிகள் அச்சரப்பாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

மேலும் மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகள் மீண்டும் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் விவசாயிகள் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 60 ஏக்கர் நிலத்தில் கடந்த 3 மாதங்களாக 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி விரைந்து மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பி அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News