உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் அருகே மின் கம்பத்தில் விளக்குகள் திருட்டு
- விலை உயர்ந்த மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சிக்குட்பட்ட நாலூர் ஏரிக்கரை, நாலூர் மெயின் ரோட்டில் முக்கிய வீதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இருந்த விலை உயர்ந்த மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சுஜாதா ரகு மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.